Meta அளிக்கும் ஆதரவுடன், சர்வதேச உண்மை சரிபார்ப்பு வலைத்தொடர்பு (International Fact-Checking Network) இலவச உண்மை சரிபார்ப்புப் பாடப்பிரிவை அறிமுகம் செய்வதில் பெருமகிழ்ச்சி கொள்கிறது. உண்மை சரிபார்ப்பு, உறுதிப்படுத்துதல், அம்பலப்படுத்துதல் மற்றும் ஆரோக்கியம் குறித்த தவறான மற்றும் பொய்ப் பரப்புரை ஆகியவற்றில் கவனம் செலுத்தக்கூடிய மூன்று தொகுதிகளாக இது பிரிக்கப்பட்டுள்ளது. இந்தப் பாடப்பிரிவு பத்திரிகையாளர்கள் எவ்வாறு உண்மை சரிபார்க்கத்தக்க உரிமைகோரல்களைக் கண்டறிவது, உண்மை சரிபார்ப்புக்கான முறைமைகள் மற்றும் அவர்களது பயணத்தில் உதவக்கூடிய கருவிகள் மற்றும் உபாயங்கள் ஆகியவற்றை முதன்மை நோக்கமாகக் கொண்டுள்ளது.
விரும்பிய வேகத்தில் கற்கத்தக்க இந்தப் பாடப்பிரிவானது பத்திரிகையாளர்கள், கல்வித்துறையைச் சேர்ந்தவர்கள் மற்றும் ஆசிய-பசிபிக் பிராந்தியம் எங்குமுள்ள உத்வேகமுள்ள உண்மை சரிபார்ப்பாளர்களுக்காகத் திறந்திருக்கும். பாடப்பிரிவை வெற்றிகரமாக நிறைவுசெய்யும் பங்கேற்பாளர்கள் தேர்ச்சிச் சான்றிதழ் பெறுவார்கள். உண்மை சரிபார்ப்பு உலகத்தின் முழுமையான ஆய்வு மற்றும் பகுப்பாய்வுக்கு இணையக் கருத்தரங்கில் கலந்துகொள்ளவும் அழைக்கப்படுவார்கள்.
அட்டவணை
இந்தப் பாடப்பிரிவு உங்கள் சொந்த வசதிப்படி உங்களுக்கேற்ற வேகத்தில் நிறைவுசெய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொகுதிகளை நிறைவுசெய்ய மாணவர்களுக்கு 2 முதல் 3 மணி நேரங்கள் எடுக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.